உதவி · Help & contact

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் · Frequently asked questions

எங்களுக்கு எழுதுங்கள் · Write to us

support@saasnest.in

தவறான தேதி/நேரம் கண்டால்: ஆப்பில் மேலும் → பிழையைத் தெரிவிக்கவும். அது தேதி, ஊர், ஆப் பதிப்பை தானாகச் சேர்க்கும்.
Spotted a wrong date or time? In the app use More → Report an error; it fills in the date, place and app version for you.

பஞ்சாங்கம் · Panchangam

என் அச்சு காலண்டரில் உள்ள திதி / நட்சத்திர நேரம் ஏன் சற்று வேறுபடுகிறது?

வானம் ஆப்பில் தமிழ் மாதமும் தேதியும் அச்சு காலண்டர்கள் போலவே வாக்கிய முறையில் உள்ளன. திதி, நட்சத்திரம், யோகம் திருக்கணித முறையில் (வானியல் கணக்கு, லஹிரி அயனாம்சம்) உங்கள் ஊருக்குக் கணக்கிடப்படுகின்றன. வாக்கிய பஞ்சாங்கங்களுடன் சில நாட்களில் சில நாழிகை வேறுபாடு இருப்பது இயல்பு.

Why do thithi/star times differ a little from my printed calendar? The Tamil month and date follow the Vakya method like printed calendars. Thithi, nakshatram and yogam use the Thirukanitha method (astronomical calculation, Lahiri ayanamsa) for your town, so they can differ by some minutes from Vakya panchangams on some days.

ராகு காலம், சூரிய உதயம் என் ஊருக்குச் சரியாக வர என்ன செய்வது?

முகப்புத் திரையின் மேலே உள்ள ஊர் பெயரைத் தொட்டு உங்கள் ஊரைத் தேடித் தேர்ந்தெடுங்கள், அல்லது “என் இருப்பிடத்தைப் பயன்படுத்து” என்பதைத் தொடுங்கள். எல்லா நேரங்களும் அந்த ஊரின் சூரிய உதயத்தைப் பொறுத்து மாறும்.

How do I get the right timings for my town? Tap the place name at the top of the Today screen and pick your town, or use “My location”. All timings are based on sunrise at that place.

இணையம் இல்லாமல் வேலை செய்யுமா?

ஆம். காலண்டர், பஞ்சாங்கம், பண்டிகைகள், திருமணப் பொருத்தம் எல்லாம் இணையம் இல்லாமலே வேலை செய்யும். வானிலைக்கு மட்டும் இணையம் தேவை; இல்லையென்றால் கடைசியாகப் பெற்ற வானிலை காட்டப்படும்.

Does it work offline? Yes. Everything except the weather works offline. Without internet the last downloaded forecast is shown.

மழை எச்சரிக்கை · Rain alert

மழை எச்சரிக்கை வரவில்லை. ஏன்?
  • ஆப் அமைப்புகளில் மழை எச்சரிக்கை இயக்கப்பட்டுள்ளதா எனப் பாருங்கள்.
  • போன் Settings → Apps → வானம் → Notifications அனுமதி இயக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • சில போன்களில் (Xiaomi, Vivo, Oppo, Realme, Samsung) Battery அமைப்பில் வானம் ஆப்பை “Unrestricted / No restrictions” என வைக்கவும். இல்லையென்றால் பின்னணிச் சரிபார்ப்பு நிறுத்தப்படலாம்.
  • மழை எச்சரிக்கை ஒரு கணிப்பு மட்டுமே. பாதுகாப்புக்கு IMD / அரசு எச்சரிக்கைகளைப் பின்பற்றவும்.

I didn’t get a rain alert. Check that rain alerts are on in the app’s Settings, that notifications are allowed for Vaanam in Android settings, and that battery optimisation is set to “Unrestricted” for Vaanam (important on Xiaomi, Vivo, Oppo, Realme and Samsung phones). Rain alerts are forecasts only; for safety follow IMD and government warnings.

விட்ஜெட் · Widgets

முகப்புத் திரையில் விட்ஜெட் சேர்ப்பது எப்படி? அது புதுப்பிக்கப்படவில்லையே?

முகப்புத் திரையில் காலியான இடத்தை நீண்ட நேரம் அழுத்தி → Widgets → வானம் → விரும்பிய விட்ஜெட்டை இழுத்து வையுங்கள். விட்ஜெட் தானாக நள்ளிரவுக்குப் பிறகு புதுப்பிக்கப்படும். புதுப்பிக்கவில்லை என்றால் மேலே சொன்னபடி Battery அமைப்பை “Unrestricted” ஆக்கி, ஒருமுறை ஆப்பைத் திறக்கவும்.

How do I add a widget, and why isn’t it updating? Long-press an empty spot on your home screen → Widgets → Vaanam, and drag one onto the screen. Widgets refresh by themselves after midnight. If one stops updating, set Vaanam’s battery setting to “Unrestricted” and open the app once.

விளம்பரங்களை நீக்கு · Remove Ads

“விளம்பரங்களை நீக்கு” வாங்கினேன், புதிய போனில் விளம்பரம் வருகிறது.

அதே Google கணக்கில் Play Store-இல் உள்நுழைந்திருக்க வேண்டும். ஆப்பில் அமைப்புகள் → வாங்கியதை மீட்டெடு தொடவும். இது ஒருமுறை வாங்குதல்; மாதக் கட்டணம் இல்லை.

I bought Remove Ads but see ads on my new phone. Make sure the Play Store is signed in with the same Google account, then tap Settings → Restore purchase in the app. It is a one-time purchase, not a subscription.

பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?

பணம் செலுத்துதல் Google Play மூலம் நடக்கிறது. வாங்கிய 48 மணி நேரத்திற்குள் Google Play-இல் நேரடியாக refund கோரலாம். அதன் பிறகு எங்களுக்கு எழுதுங்கள்; உதவ முயல்வோம்.

Can I get a refund? Purchases are handled by Google Play. You can request a refund directly from Google Play within 48 hours of purchase (how). After that, write to us and we will try to help.

திருமணப் பொருத்தம் · Marriage matching

பொருத்த முடிவு என் ஜோதிடர் சொன்னதிலிருந்து வேறுபடுகிறது.

வானம் ஆப் நட்சத்திரம், ராசி வைத்து 10 பொருத்தங்களைப் பார்க்கிறது. சில பொருத்தங்களின் விதிகள் (தினம், ராசி, வசியம்) பாரம்பரியத்துக்குப் பாரம்பரியம் சற்று மாறும். மேலும் ஜோதிடர்கள் முழு ஜாதகத்தையும் (தோஷம், தசை) பார்ப்பார்கள். திருமண முடிவுக்கு உங்கள் ஜோதிடரின் ஆலோசனையையே பின்பற்றவும். வேறுபாடு இருந்தால் இரு நட்சத்திரங்களுடன் எங்களுக்கு எழுதுங்கள்.

The matching result differs from my astrologer’s. The app checks the 10 poruthams from the stars and rasis only, and a few rules (Dinam, Rasi, Vasyam) vary between traditions. Astrologers also study the full horoscope. Please follow your astrologer for wedding decisions, and tell us the two stars if you think a rule is wrong.

See also: Privacy policy · Terms of use · Delete your data · About & credits